search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசை வீடு எரிந்து நாசம்"

    • மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியபோது விபரீதம்
    • தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மயிலா (வயது 60). இவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது குடிசை வீட்டின் மேலே மின் ஒயர் செல்கிறது. நேற்று அந்த பகுதியில் லேசான காற்று அடித்தது. அப்போது மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியது தீப்பொறி குடிசை வீட்டின் மீது விழுந்தது.

    குடிசை தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீயில் கருகி நாசமானது.

    • குடிபோதையில் விபரீதம்
    • தீயை அணைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் தினறினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் ராஜா (வயது 51). இவரது வீட்டு அருகே தன்னுடைய மகள் தனிமையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் ராஜா மது போதையில் தனது மகளின் குடிசை வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அப்போது குடிபோதையில் இருந்த ராஜா தனது கையில் வைத்து இருந்த சிகரெட்டை சி எரிந்துள்ளார். இதனால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

    அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீ மளமளவென பரவியது தீயை அணைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் தினறினர்.

    வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. அதன் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அைணத்தனர். நாட்றம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×